உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாப்பேரி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

அருணாப்பேரி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பாவூர்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை 108 வேத விற்பன்னர்கள் பங்கேற்ற மஹா யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அம்மன் சப்பரம் 6ம் திருநாளான 13ம் தேதி மகிழ்வண்ணநாதபுரம், 14ம் தேதி, பெத்தநாடார்பட்டி , பொட்டலூர், 15ம் தேதி நவ நீதகிருஷ்ணபுரம் , இலங்காபுரிபட்டணம், 16ம் தேதி நாகல்குளம் ஆகிய ஊர்களுக்கு வீதியுலா செல்கிறது. 10ம் நாள் திருவிழாவான 17ம் தேதி இரவு அம்மன் சப்பர வீதியுலா, அதிகாலை பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !