ஹெத்தையம்மன் திருவிழாவில் சாய் பல்லவி: சமூக வலைதளத்தில் வைரல்
ADDED :1014 days ago
கோத்தகிரி: கோத்தகிரி பேரகனி ஹெத்தையம்மன் திருவிழாவிற்கு, பாரம்பரிய படுக உடையில் வந்த நடிகை சாய் பல்லவியின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையின மக்களான படுக மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழா, கோத்தகிரி பேரகனி, ஜெகதளா உட்பட 14 கிராமங்களில் நடந்து வருகிறது. இதில் மூலஸ்தானமாக உள்ள பேரகனி கிராமத்தில் நடந்து வரும் ஹெத்தையம்மன் திருவிழாவிற்கு, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும், படுக இனத்தை சேர்ந்த நடிகை சாய் பல்லவி வருகை தந்தார். இவர் பாரம்பரிய உடை அணிந்தும், வெள்ளி அணிகலன்கள் அணிந்தும், தனது உறவினர்கள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். இதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், தற்போது இந்த படங்கள் வைரல் ஆகியுள்ளது.