வத்திராயிருப்பு கோயில் தெப்பத்தில் மீண்டும் ஒரு பெருமாள் சிலை
ADDED :1012 days ago
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா மாவூற்று உதயகிரி நாதர் கோயில் தெப்பம் புனரமைப்பின் போது, நேற்றும் இரண்டடிஉயர பெருமாள் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இக்கோயிலின் தெப்பக்குளம் அரசின் சார்பில் புனரமைக்கப்படுகிறது. குளத்தில் தேங்கி இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு, தோண்டப்பட்டது. நேற்று மாலை 4:00 மணிக்கு 2 அடி உயரம் உள்ள சிதைந்த நிலையில் ஒரு பெருமாள் கற்சிலை கிடைத்தது. அதை வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர். பின் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைத்தனர். விசாரணைக்கு பிறகு இந்த சிலைகள் அரசு அருங்காட்சியத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 2022 செப்.,8ல் இதே குளத்தில் ஒரு அடி உயரத்தில் பொன் நிறத்தில் ஒரு பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.