உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் திருமாலை வழிபாடு

ஆண்டாள் திருமாலை வழிபாடு

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே நீரேத்தான் நவநீத பெருமாள் மற்றும் தாதம்பட்டி நீலமேகப் பெருமாள் கோயில்களில் ஆண்டாள் திருமாலை அணிவிக்கும் வழிபாடு நடந்தது. இக்கோயில்களில் மார்கழி மாதத்தை முன்னிட்டு கச்சைகட்டி எத்திராஜ் குழுவினர் திருப்பாவை பாடல் பாடினர். பரசுராமன் ஜெயந்தி விழா சிறப்பு பூஜையை தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்துரரில் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட மாலை மற்றும் பச்சைக்கிளியினை பட்டர்கள் கண்ணன், நாராயணன் சுவாமி, தாயாருக்கு அணிவித்தனர். அதேபோல் நீலமேகப் பெருமாள் கோயிலுக்கு மாலையை ஊர்வலமாக எடுத்து சென்று பூஜாரி பாண்டி கண்ணன் அணிவித்தார். பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !