நம்ம ஊர் மோடி பொங்கல் விழா
ADDED :1013 days ago
மேலூர்: கீழவளவு, குழிச்சேவல்பட்டி காளியம்மன் கோயிலில் மேலுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கிழக்கு ஒன்றிய தலைவர் குமார் தலைமை வகித்தார் பா.ஜ.. சார்பில் பொங்கல் பானை, பச்சரிசி, வெல்லம் வழங்கப்பட்டு 101 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. தவிர காளை மாடுகளுக்கு வேஷ்டி, துண்டுகள் வழங்கப்பட்டது. இவ் விழாவில் மாவட்ட பொது செயலாளர்கள் கண்ணன், ஆனந்த ஜெயம், ஆன்மீகம் ஆலைய பிரிவு மாவட்டத் தலைவர் தர்மலிங்கம், ஒன்றிய பொது செயலாளர்கள் சிவா, முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.