குத்தாலம் வந்த ஆதியோகி ரதம்: பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை: கோவையிலிருந்து குத்தாலத்திற்கு வந்த ஆதியோகி ரதத்தை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் ஆதியோகி சிலை ரதத்தில் எழுந்தருள செய்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் கோவையிலிருந்து தொடங்கிய இந்த ரத யாத்திரை கும்பகோணம் வழியாக குத்தாலம் பகுதிக்கு வந்தடைந்தது. அங்கு ஆதி யோகிக்கு, சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆதியோகி ரதம் செல்கிறது. அதனை அடுத்து , இந்த ரத யாத்திரை திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக பிப்ரவரி 18-ம் தேதியன்று, வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையம் சென்றடையும்.