மஹா கால பைரவர் கோவிலில் விநாயகருக்கு சதுர்த்தி விழா
ADDED :1069 days ago
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மஹா கால பைரவர் கோவிலில், கணபதி சன்னிதி. நேற்று, சங்கடஹர சதுர்த்தி நாளை ஒட்டி, மூலவருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் மூலவருக்கு விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. இதேபோல, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை திருநீலகண்டேஸ்வரர் கோவில், செல்வ விநாயகர் கோவில், நாகவல்லியம்மன் கோவிலில் உள்ள விநாயகர் கோவில் உள்ளிட்டவற்றில் சங்கட ஹர சதுர்த்தி விழா சிறப்பாக நடந்தது.