ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழா
ADDED :1016 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் உள்ள கோதை நாச்சியார் ஆண்டாளுக்கு கூடார வெள்ளி விழா நடந்தது. அம்பாளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை உள்ளிட்ட பாராசுரங்கள் பாடி, ஸ்ரீபதி பட்டர் தலைமையில் 11 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இந்நிகழ்வில் செயல் அலுவலர் சுதா, எழுத்தர் முரளி, உதவி அர்ச்சகர் நாராயணன் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மார்கழி வழிபாட்டு குழுவினர் ஏற்பாடுகளைச் செய்தனர்.