நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கூடாரவல்லி பூஜை
ADDED :1077 days ago
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கூடாரவல்லி பூஜை நடந்தது.
மார்கழி 27ம் தேதி ஆண்டாள் நாராயணனை மாலை சூடிய நாளாகும். அன்று கூடாரவல்லி பூஜை செய்வது வழக்கம். கூடாரவல்லியன்று ஆண்டாளை வணங்கினால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம். நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு வேணுகோபால சுவாமிக்கும் ஆண்டாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. ஆண்டாள் சமேதராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.