விக்கிரவாண்டி பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்
ADDED :1013 days ago
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது.
விக்கிரவாண்டி ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத கூடாரவல்லியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு 100 தடா வெண்ணையும், அக்காரா அடிசலும் (பால் சாதம்) தீப ஆராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை மாலோலன் பட்டாச்சாரியார் முன்னின்று செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழு மற்றும் கிராம பொதுமக்கள் முன் நின்று செய்திருந்தனர்.