உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேப்ப மரத்தில் பால் வடியும் அரிய நிகழ்வு: பக்தர்கள் வழிபாடு

வேப்ப மரத்தில் பால் வடியும் அரிய நிகழ்வு: பக்தர்கள் வழிபாடு

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் வேப்ப மரத்தில் பால் வடிவதை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு வணங்கி வருகின்றனர்.

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் முன்பாக பழமையான வேப்பமரம் உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக பால் வடிந்த வண்ணம் உள்ளது. இதனை கண்டு அப்பகுதி மக்கள் மரத்தின் அருகே தீபம் ஏற்றி வழிபட்டு, பரவசமடைந்து வருகின்றனர். தேவையை விட மரத்தில் உள்ள தண்ணீரின் அளவு அதிகமாகும் போது, மரப் பட்டையின் அடிப்பகுதியில் உள்ள புளோயம் பாதிக்கப்பட்டு, அதன் வழியாக பாலாக கொட்டுகிறது. மரத்தில் தண்ணீரின் அளவு குறையும்போது, திசு அடைபட்டு இனிப்பு பால் வடிவதும் நின்று போகும். இது அறிவியல் ரீதியான நிகழ்வாக அறிவியலாளர்கள் கூறினாலும், ஆன்மீகவாதிகள் வேப்பமரத்தில் பால் வடியும் நிகழ்வை பக்தி பரவசத்துடன் பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !