உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் மணமாள மாமுனிகள் மங்களாசாசனத்துடன் நிறைவு பெற்றது. ஜனவரி 8-ல் துவங்கிய இவ்விழா கடந்த எட்டு நாட்களாக காலையில் ஆண்டாள் கோயிலில் இருந்து புறப்பட்டு மாட வீதி, ரதவீதிகள் சுற்றி வந்து எண்ணைகாப்பு மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு மதியம் 3:00 மணிக்கு மேல் எண்ணெய்காப்பு சேவைகள் நடந்தது. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு மணவாள மாமுனி சன்னதி வாசலில் ஆண்டாள் எழுந்தருள மங்காள சாசனம் நடந்தது. நேற்று மாலை கனுஉற்சவம், முத்துக்குறி நடந்தது. இதனையடுத்து மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவங்கள் நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !