கிரிவலப்பாதை பச்சையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா பந்தக்கால் நடல்
ADDED :996 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிரிவலப்பாதையிலுள்ள, 100 ஆண்டுகள் பழமையான பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 27ல் நடப்பதை முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, நுாற்றாண்டுகள் பழமையான பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் உள்ளது. இது தற்போது புதுப்பிக்கப்பட்டு, வரும், 27ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. வரும், 23ல் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்க உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்க நேற்று, பச்சையம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடப்பட்டது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.