காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
ADDED :1004 days ago
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி சிவகங்கை உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மகேந்திர பூபதி, கணக்கர் அழகு பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வங்கி பணியாளர்கள், சேவை குழுவினர், கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரூ. 11 லட்சத்து 65 ஆயிரத்து 966 பணமும், 67 கிராம் தங்கமும், 382 கிராம் வெள்ளியும், 19 வெளிநாட்டு நோட்டுக்களும் இருந்தன.