உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் புனித நீராடல்

தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் புனித நீராடல்

தேவிபட்டினம்: தை அமாவாசை முன்னிட்டு, தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

தேவிபட்டினத்தில் நவபாஷாண நவக்கிரகம் கடலுக்கு அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று தை அமாவாசை என்பதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நவபாஷாண கடற்கரையில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி நவக்கிரங்களை சுற்றி வந்து வழிபட்டனர் தொடர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை நவபாஷாணத்தை நிர்வகித்து வரும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். ஆர்.எஸ். மங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கமலநாதன் தலைமையிலான, மீட்பு படை வீரர்கள், கடல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !