உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பால்குடம் எடுத்து வழிபாடு

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பால்குடம் எடுத்து வழிபாடு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில்  உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு 15 ஆம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது. ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான  உலக பிரசித்தி பெற்ற இந்த பையன் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தை அமாவாசையை  முன்னிட்டு இன்று 15 ஆம் ஆண்டு பால்குட திருவிழா  நடைபெற்றது.  மஞ்சள் உடை உடுத்தி ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள்  ஆணைகுளக்கரையில் அமைந்துள்ள  ஸ்ரீ எதிர்காலேஸ்வரர் ஆலயத்திலிருந்து  பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோயில் வாயிலில் தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சக்தி கரகத்திற்கு தீபாராதனை செய்து வரவேற்று வழிபாடு செய்தார். தொடர்ந்து பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கோயிலை சுற்றி வந்து அபிராமி அம்மன் சன்னதியில் பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு தருமபுர ஆதீனகர்த்தர் அருளாசி வழங்கி பிரசாதங்கள் வழங்கினார். தொடர்ந்து இரவு ஆதினகர்த்தர் முன்னிலையில் அபிராமி பட்டர் உயிரை காப்பாற்றுவதற்காக ஸ்ரீ அபிராமி அம்மன் தை அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய திருவிளையாடல் புராணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !