தை அமாவாசை அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1151 days ago
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தை அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. நரசிம்மநாயக்கன்பாளையம் பழையூரில் அங்காளம்மன் கோவில் உள்ளது. தை அமாவாசையையொட்டி நேற்று காலை கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.