திருநள்ளாறு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் நேற்று தை அம்மாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். நவரகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் பக்தர்கள் அதிகம் காணப்பட்டு வருகிறது.நேற்று தை அம்மாவசையை முன்னிட்டு விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் பகவானை தரிதனம் செய்தனர். மேலும் நளன்குளத்தில் பக்தர்கள் குளித்துவிட்டு பகவானை தரிசனம் செய்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிஸ்கட்,தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் செய்துள்ளனர். இதனால் பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.பாதுகாப்பு குறித்து இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் தலைமையில் போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.