ஆதியந்தபிரபு கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1005 days ago
கீழச்சிவல்பட்டி: திருப்புத்தூர் அருகே ஆவணிப்பட்டியில் பக்த ஜெயங்கொண்ட ஆஞ்சநேயர், ஆதியந்த பிரபு கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இக்கோயிலில் விநாயகரும் ஆஞ்சநேயரும் சரிபாதியாக நின்று சமநிலை மூர்த்திகளாக சுதை சிற்பமாக எழுந்தருளியுள்ளனர். முதலில் விநாயகரையும், இறுதியில் ஆஞ்சநேயரையும் வழிபடுவது வழக்கம். இங்கு ஏககாலத்தில் இருவரையும் ஒருசேர பக்தர்கள் தரிசிக்கின்றனர். தை அமாவாசையை முன்னிட்டு இரவு 7:30 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. திரளாக ஆவணிப்பட்டி வட்டார கிராமத்தினர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.