உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சியில் இருந்து 300 பக்தர்கள் திருப்பதிக்கு நடைபயணம்

செஞ்சியில் இருந்து 300 பக்தர்கள் திருப்பதிக்கு நடைபயணம்

செஞ்சி: செஞ்சியில் இருந்து 16 நாள் பயணமாக 300 பக்தர்கள் திருப்பதிக்கு நடைபயணம் துவக்கினர். செஞ்சி திருவேங்கடகிரி கோவிந்த நாம சபா சார்பில் 23ம் ஆண்டாக மாலை அணிந்து 48 நாள் விரதமிருந்த பக்தர்கள் நேற்று திருமலைக்கு 16 நாள் நடைபயணம் துவக்கினர். சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு வழிபாடு நடத்தினர். நடைபயண குழுவினருக்கு பெண்கள் பாத பூஜை செய்த வணங்கினர். இந்த குழுவினர் செஞ்சி, ஆரணி, ஆற்காடு வழியாக 31ம் தேதி திருப்பதியை சென்றடைகின்றனர். இவர்களுக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் சார்பில் உணவு, தங்கும் இடம் ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று 300 பேர் நடைபயத்தை துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !