குண்டுகுளம் செங்காருடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :998 days ago
நரிக்குடி: நரிக்குடி அ.முக்குளம் ஊராட்சி குண்டு குளத்தில் பூரணபுஷ்கலாம்பாள், செங்காருடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. யாக சாலையில் விக்னேஸ்வரர் பூஜை, மகா சாந்தி, கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. சுவாமிக்கு தீப ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து கும்பாபிஷேகம் செய்தனர். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானவர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.