உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கும்பாபிஷேக விழாவில் சண்முகருக்கு திருக்கல்யாணம்

பழநி கும்பாபிஷேக விழாவில் சண்முகருக்கு திருக்கல்யாணம்

பழநி: பழநி, கும்பாபிஷேக திருவிழாவில் மலைக்கோயிலில் வள்ளி, தெய்வானை உடன் சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

பழநி, மலைக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மலைக்கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. வின்ச் ரோப்கார், தரிசனம் அனைத்தும் கட்டணமில்லாமல் பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். ஹிந்து அறநிலைத்துறை துறை அமைச்சர் படிப்பாதை மூலம் மலைக்கோயில் வந்து சென்றார். இதனை தொடர்ந்து மலைக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை உடன் சண்முகருக்கு திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது. அதில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழுவினர் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !