நாகசாயி மந்திர் கோவில் கும்பாபிஷேகம் : தீர்த்தம், முளைப்பாரி நிகழ்ச்சி
ADDED :1000 days ago
கோவை: கோவை நாகசாயி மந்திர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 01.02.2023 அன்று நடைபெற உள்ளது. அதன் முதல்நாள் நிகழ்வாக சிவாச்சார்யார் அழைப்பு, தீர்த்தம், முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. மேட்டுப்பாளையம் ரோடு ராமலிங்கம் காலனி ஐயப்பன் கோவில் இருந்து ஸ்ரீ நாகசாயி கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். இதில் திரளாக பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.