அன்னூர் மதுர காளியம்மன் கோவிலில் திருப்பணிக்கான கால்கோள் விழா
ADDED :1024 days ago
அன்னூர்: அன்னூர் அருகே மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கான கால்கோள் விழா நேற்று நடந்தது. அன்னூர் அருகே லக்கேபாளையம் கோவில்பாளையத்தில் பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக கருங்கல்லில், கருவறை, விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை கட்டும் திருப்பணிக்கான கால் கோள் விழா நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. இதில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், செல்வபுரம் சிவானந்த தவக்குடில் ஸ்வயம் பிரகாஷ் ஆனந்த சாமிகள் ஆகியோர் பங்கேற்று அருளுரை வழங்கினர். முன்னதாக வேள்வி பூஜை நடந்தது இதையடுத்து கால்கோள் நடும் நிகழ்வு நடந்தது. இதை தொடர்ந்து மகா தீபாராதனையும் அன்னதானம் வழங்குதலும் நடந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.