கருமத்தம்பட்டி சிவ கணபதி கோவில் ஆண்டு விழா
ADDED :955 days ago
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி குமரன் நகர் சிவ கணபதி கோவில் ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கருமத்தம்பட்டி குமரன் நகர் சிவ கணபதி கோவிலில், ஐந்தாம் ஆண்டு விழா நேற்று முன் தினம் நடந்தது. கணபதி ஹோமத்துடன் ஆண்டு விழா பூஜைகள் துவங்கின. புனித நீர் நிரப்பப்பட்ட, 108 சங்குகளுக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு, பால், தயிர், இளநீர் மற்றும் சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் நடந்தது. அலங்கார உபசார பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.