அச்சன்கோவிலில் ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி விழா
ADDED :955 days ago
செங்கோட்டை: அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி விழா நடந்தது. கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில், சுவாமி பிரதிஷ்டை செய்யபட்ட, தைமாதம் ரேவதி நட்சத்திரத்தன்று நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான புஷ்பாஞ்சலி நடந்தது. ஐயப்பனுக்கு சுமார் இரண்டு டன் பூக்களால் மெகா புஷ்பாஞ்சலி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆபரண கமிட்டி தலைவர் ஹரிகரன், செயலாளர் மாடசாமி ஜோதிடர், பொருளாளர் சுப்புராஜ், மற்றும் மும்பை முருகேசன், கமிட்டி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.