பழநி கோயிலில் கும்பாபிஷேகம்: பெரியகுளம் கோயில்களில் பூஜை
ADDED :1062 days ago
பெரியகுளம்: பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெரியகுளம் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பழநி மலை முருகன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் மற்றும் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடி இறைவனை வழிபட்டனர். காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கும், முத்துக்குமரன் சுவாமிக்கும், காளகஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது.