காளஹஸ்தி சிவன் கோயிலில் ரஷ்ய நாட்டினர் சுவாமி தரிசனம்
ADDED :1016 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ரஷ்ய நாட்டினர் நேற்று காளஹஸ்தி சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர் முன்னதாக சிறப்பு ராகு கேது சர்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபட்டதோடு காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தனர்.கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் கோயிலுக்குள் கல் தூண்களில் செதுக்கப்பட்டிருந்த சிற்பக் கலைகளை கண்டு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் வெளிப்படுத்தினர் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் சாமி தரிசனம் செய்தது மனதிற்கு அமைதியும் பக்தி பாவத்தையும் ஏற்படுத்தியதாக ரஷ்ய நாட்டு பக்தர்கள் தெரிவித்தனர்.