உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லியம்மன் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

செல்லியம்மன் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

தர்மபுரி: தர்மபுரியை அடுத்த அன்னசாகரம் மாரியம்மன், செல்லியம்மன், பட்டாளம்மன் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 2ம் தேதி கொடியேற்றமும், 3ம் தேதி, அம்மனுக்கு பக்தர்கள் பச்சரிசி மாவு, பானகம் படைத்து வழிபட்டனர். நேற்று முன்தினம் மாரியப்மனுக்கு தாரை தப்பட்டை முழங்க கஞ்சி கலையத்தில் பக்தர்கள் கூழ் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படைத்தனர். நேற்று காலை 9.15 மணிக்கு கரகாட்டம், மயிலாட்டம், நையாண்டி மேளம், தாரை, தப்பட்டை, வாண வேடிக்கை முழங்க பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலமும், ஸ்வாமி ஊர்வலமும் நடந்தது. இரவு சரவணன், செல்வம் ஆகியோரின் "மாரியம்மன் பிறப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இன்று (செப்., 6) காலை 9.15 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மஞ்சள், சந்தனம் மட்டும் பக்தர்கள் பயன்படுத்த வேண்டும். வண்ண பொடிகளை யாரும் பயன்படுத்த கூடாது என கோவில் நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு இந்தியன் பாஸ்ஸ் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடக்கிறது. அன்னசாகரம், மாரியப்பன் நாதஸ்வரம், ராஜேந்திரனின் தவில் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் சீனிவாசன், தர்மகர்த்தர் வடிவேல், விழாகுழுவினர் மாரிமுத்து, அர்ச்சுணன், முன்னாள் கவுன்சிலர் ரவி, அன்பழகன், திருப்பதி, வடிவேல், கோவில் பூசாரி நகுலன் மற்றும் ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !