உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் பாலாலயம்

எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் பாலாலயம்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் பாலாலய விழா நடந்தது. இக்கோயிலில் ராஜகோபுரம், விமானம் உள்ளிட்ட பிரகாரங்களில் புணரமைப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனை ஒட்டி நேற்று காலை 9:00 மணிக்கு பாலாலய பூஜை அனுக்கையுடன் துவங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, கலாகர்சனம், யாகசாலை பிரவேசம், யாகசாலை பூஜைகள், பஞ்ச சூக்த ஹோமம் நடந்தன. பின்னர் 10:00 மணிக்கு மேல் மகாபூர்ணாகுதி நிறைவடைந்து ராஜகோபுரம், புண்ணிய கோடி விமான படங்களுக்கு பாலாலய மகா அபிஷேசம் நடந்தது. பின்னர் தீப ஆராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர தர்ம பரிபாலன சபையார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !