பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1032 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள சுருட்டு பள்ளியில் வீற்றிருக்கும் சர்மங்கலா சமேத ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி கோயிலில் இன்று சுயம்பு ஸ்ரீ வால்மிகேஸ்வர சுவாமிக்கும் நந்தீஸ்வர சுவாமிக்கும் ஏககாலத்தில் சுகந்த திரவங்களாலன மஞ்சள், குங்குமம், சந்தனம் ,விபூதி ,இளநீர் போன்ற சுகந்த திரவங்கள் உட்பட பஞ்சாமிர்தத்தாலும் பிரதோஷ கால அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .இதில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி ரெட்டி என்கிற முனி சந்திரசேகர் ரெட்டி தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.