காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் காணிக்கைகணக்கிடும் பணி
ADDED :1350 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் தேவஸ்தானத்தில் இன்று வெள்ளிக்கிழமை 3 .2 .2023 அன்று கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியலில் கடந்த 15 நாட்களில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை செலுத்தியதை கணக்கிடும் பணியை கோயில் அதிகாரிகள் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர் .அதில் பணமாக 99 லட்சத்து 1,458 ரூபாய் ரொக்க பணமாகவும், தங்கம் 50 கிராம், வெள்ளி ஒரு கிலோ 300 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் வந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி தெரியப்படுத்தினார்.