உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சமையல் பாத்திரகள் காணிக்கை

காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சமையல் பாத்திரகள் காணிக்கை

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்க இருக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்வத்தை யொட்டி ஸ்ரீகாளஹஸ்தி  தேவஸ்தானத்திற்கு நெல்லுரை சேர்ந்த (முரளி கிருஷ்ணா ஹோட்டல்) தனியார் உணவக உரிமையாளர் சுப்பாராவ் என்பவர் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்களை காணிக்கையாக கோயிலுக்கு வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோயில் சார்பில் செய்யப்பட்டது கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் சாமி படத்தையும் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !