அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி பூஜை
ADDED :1032 days ago
தஞ்சாவூர் : பட்டுக்கோட்டை தாலுகா செட்டியக்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள சிவசக்தி ஆலயம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வரும் பிப்., 18ஆம் தேதி மகா சிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் சுவாமிக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.