மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்
ADDED :1085 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்ப திருவிழா இன்று (பிப்., 4) மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடந்தது. வண்டீயூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு எழுந்தருவதற்காக விடியற் காலையில் வெள்ளி அவுதா தொட்டியோடு கூடிய வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மனும், வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமியும் சகலவிதமான ஆபரணங்களையும் பூஷித்துக்கொண்டு சென்றனர். காலையில் இரு சுற்று அம்மனும், சுந்தரேஸ்வரரும் வலம் வந்து அருள்பாலித்தனர். மாலையில் ஒரு சுற்றும் அம்மனும், சுந்தரேஸ்வரரும் வலம் வருவர். இந்நிகழ்ச்சியை பிப்ரவரி 4 காலை 10:30 மணி முதல் நேரலையில் கோயிலில் வெப்சைட்டில் maduraimeenakshi.hrce.tn.gov.inல் காணலாம்.