வடபழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம்
ADDED :978 days ago
சென்னை: வடபழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வடபழனி தைப்பூச பால் காவடி சபையின் பொன்விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவினை முன்னிட்டு ஒருவருக்கு குடம் குடமாய் மிளகாய்ச் சாந்து அபிஷேகம் செய்யப்பட்டது. லேசாக மிளகாய் நெடி அடித்தாலே தாங்க முடியாத நிலையில் பல குடங்களில் மிளகாய் கரைத்து ஊற்றிய போதும் ஆடாது அசையாது இருந்து இவர்அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். கோயிலில் உற்சவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.