உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நற்செயல் நடைபெற... முருகனுக்கு காவடி!

நற்செயல் நடைபெற... முருகனுக்கு காவடி!


நீண்ட நாட்களாக உடல் நிலைசரி இல்லை என்றாலும் , திருமணம் தள்ளிப்போகிறது என்றாலும் முருகனுக்கு காவடி, பால்குடம் எடுக்கிறோம் என பெரியோர்கள் வேண்டிக்கொள்வர். அந்த காவடிகள் பல அவையாவன:
இனிப்புகளை( சர்க்கரை) எடுத்து வருதல் சர்க்கரை காவடி
புனித தீர்த்தத்தை எடுத்து வருதல் தீர்த்தக்காவடி
வாகனத்தில் அலகு குத்தி வருதல் பறவைக்காவடி
பால்குடத்தை கட்டி எடுத்து வருதல் பால் காவடி
மீன் நீருடன் எடுத்து வருதல் மச்சக்காவடி
பாம்பினை கண்ணாடிபெட்டியில் எடுத்து வருதல் சர்ப்பக்காவடி
மயில் தோகையால் எடுத்து வருதல் மயில் காவடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !