ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் லட்சார்ச்சனை
ADDED :991 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்தது. பிப்ரவரி 3 அன்று மகாசந்தி ஹோமத்துடன் வருஷாபிஷேக பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் 108 கலச திருமஞ்சனம் நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை முதல் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம், லட்சார்ச்சனையை கோயில் பட்டர்கள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பட்டர்கள் செய்திருந்தனர்.