சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் தைப்பூச விழா
ADDED :991 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் தைப்பூச விழா நடந்தது. முன்னதாக மூலவர் வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு, சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.