கூரத்தாழ்வான் கோவிலில் கமலாசன தொட்டி உற்சவம்
ADDED :1106 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், ஆதிகேசவபெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இக்கோவிலில் 1,013வது திருவவதார மஹோற்சவம் கடந்த 1ல், திருப்பல்லக்கு ஆஸ்தான புறப்பாடுடன் உற்சவத்துடன் துவங்கியது. இரவு, சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக உலா வந்தார். இரண்டாம் நாள் காலை பல்லக்கிலும், இரவு யாளி வாகனத்திலும் உலா வந்தார். மூன்றாம் நாள் காலையில் திருப்பல்லக்கும், இரவு மங்களகிரி உற்சவம் நடந்தது. நான்காம் நாளான நேற்று முன்தினம் இரவு, கூரம் கிராம பக்தர்கள் சார்பில், கமலாசன தொட்டி உற்சவம் நடந்தது. முக்கியவீதி வழியாக உலா வந்த கூரத்தாழ்வானுக்கு, பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.