உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழா

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழா

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், குண்டத்தில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு, 85 அடி மூங்கில் கொடி கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது. திருவிழாவின்  முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று 6ம் தேதி காலை நடைபெற்றது. திருவிழாவையொட்டி, விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், குண்டத்தில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !