உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தெப்ப உற்சவம்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தெப்ப உற்சவம்

திசையன்விளை: உவரி சுயம்பு லிங்கசுவாமி கோயில் தைப்பூசத்திருவிழாவில் தெப்ப உற்சவம் நடந்தது. உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில் தைப்பூச திருவிழா கடந்த 28ம் தேதி
கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மூலவர், உற்சவர் சிறப்பு அபிஷேகங்கள், பஞ்சமூர்த்தி திருவீதி உலா, உதயமார்த்தாண்ட, உச்சிக்கால, சாயரட்சை, ராக்கால சிறப்பு பூஜைகள், சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளல், தெப்ப உற்சவம், சேர்க்கை தீபாராதனை, திருவாசகம் முற்றோதுதல், சமயசொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏ ற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !