மதுரை, தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் தட்சிணாமூர்த்தி ஹோமம்
ADDED :985 days ago
மதுரை: தெப்பக்குளம், மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் திருக்கோயிலில் இன்று தட்சிணாமூர்த்தி பகவானுக்கு ஹோமம் நடந்தது. மதுரை தெப்பக்குளத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்ததேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்காக பள்ளி அருகில் உள்ள மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பகவானுக்கு பள்ளி சார்பில் இன்று சிவாச்சாரியார்கள் தலைமையில் சிறப்பாக ஹோமம் நடந்தது. இந்த ஹோமத்தில் பள்ளி தலைமை ஆசிரியை இந்துமதி, பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.