உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஷா யோகா மையம் ரதத்திற்கு வரவேற்பு

ஈஷா யோகா மையம் ரதத்திற்கு வரவேற்பு

பெரியகுளம்: பெரியகுளம் வந்த கோவை ஈஷா‌ யோகா மையம் சிவரதத்தை‌ பக்தர்கள் வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவை ஈஷாமையத்திலிருந்து பிப்., 18 மகா சிவராத்திரி விழா‌ நடைபெறுவதையொட்டி பெரியகுளத்திற்கு சிவரதம் 5 ம் ஆண்டாக நேற்று வந்தது. டி.கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சென்ற ரத்தத்திற்கு பக்தர்கள் வரவேற்று, தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் விபூதி, அவல் பிரசாதம் வழங்கினர். ஏற்பாடுகளை பெரியகுளம் ஒருங்கிணைப்பாளர்கள் எழிலரசன், முத்து செல்வம், பொன்தர்மராஜன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !