நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி விழா பிப்.20 கொடியேற்றம்
ADDED :1020 days ago
நத்தம், பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.20 கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
தொடர்ந்து பிப்ரவரி 21 கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வந்து காப்பு கட்டுதல். பிப்ரவரி 24 நத்தம் மாரியம்மன் மயில் வாகனத்தில் பவனி. பிப்ரவரி 28 சிம்ம வாகனத்தில் அம்மன் பவனி. மார்ச் 3 அன்ன வாகனத்தில் அம்மன் பவனி. மார்ச் 5 பக்தர்கள் பால்குடம் எடுத்தல், பூக்குழி கண் திருத்தல் நிகழ்ச்சி நடக்கும். மார்ச் 6 அம்மனுக்கு மஞ்சள் பாவாடை அணிவித்தல். மார்ச் 7 திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக்கினி சட்டி எடுத்தல், பக்தர்கள் பூக்குழி இறங்குதல். திருவிழாவின் நிறைவாக மார்ச் 8 மஞ்சள் நீராடுதல், மாரியம்மன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பூ பல்லக்கில் பவனி வருதல்.