உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

ரேணுகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீ ரேணுகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீ ரேணுகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி கடந்த 9ம் தேதி காலை 9 மணியளவில் ஸ்ரீ கணபதி ஹோமம், கோ பூஜை, வாஸ்து ஹோமம், மாலை 6 மணி அளவில் கும்ப அலங்காரம், யாகசாலை பூஜை ஆரம்பம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் யாக பூஜை, ஹோமம், பூர்ணாஹதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6 மணியளவில் யாக சாலை ஆரம்பம், காலை 9.30 மணியளவில் கடம் புறப்பாடும், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !