மணிமந்திர விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :968 days ago
திருப்புவனம்: திருப்புவனம் மணிமந்திர விநாயகர் கோயிலின் ஒன்பதாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மணிமந்திர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்து ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து வருடாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை ஏழு மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு 108 சங்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.