ஸ்ரீரங்கம் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பஞ்ச சமஸ்காரம்
ADDED :1011 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் மொத்தம் 23 மாணவ, மாணவியர்கள் பயிலுகின்றனர். இதில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கு முன்பே மூன்று மாணவர்களுக்கு பஞ்ச சமஸ்காரம் செய்ய பட்டுள்ளதால் மீதம் உள்ள மாணவர்கள், மாணவியர்கள் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மன்னார்குடி ஸ்ரீஸ்ரீஸ்ரீ செண்டலங்கார செண்பக இராமானுஜ ஜீயர் சுவாமிகள் மூலம் பஞ்ச சமஸ்காரம் செய்விக்கும் விழா ஸ்ரீரங்கம் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் திரு.சீ.செல்வராஜ் திருச்சிமண்டல இணை ஆணையர் மற்றும் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் திரு.செ. மாரிமுத்து அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.