உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் கும்பாபிஷேக பூர்த்தி விழா

லட்சுமி நரசிம்மர் கோவிலில் கும்பாபிஷேக பூர்த்தி விழா

கடலுார் : கடலுார் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக 2ம் ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு, தலைமை அர்ச்சகர் ஜெயக்குமார் பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !