ராமேஸ்வரத்தில் சிவராத்திரி 3ம் நாள் விழா : சுவாமி, அம்மன் உலா
ADDED :1011 days ago
ராமேஸ்வரம்: மாசி சிவராத்திரி 3ம் நாள் விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகாசிவராத்திரி விழா பிப்.,11ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 3ம் நாள் விழாவான நேற்று கோயில் இருந்து காலை 6:30 மணிக்கு சுவாமி வெள்ளி பூத வாகனம், பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து, கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர். அப்போது வீதி எங்கும் கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின் மாலை 5:30 மணிக்கு மண்டகபடியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்ததும், அங்கிருந்து புறப்பாடாகி இரவு ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வந்தனர். இதனால் நேற்று முழுவதும் கோயில் நடை சாத்தப்பட்டு இருந்தது.